» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா : நலத்திட்ட உதவிகள் வழங்கல்

வெள்ளி 27, நவம்பர் 2020 11:50:03 AM (IST)தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலினின் 43வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் அண்ணா நகர் 7வது தெருவில் மாநில இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 43வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் வரவேற்புரை ஆற்றினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் முன்னிலை வகித்தார். விழாவில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ கலந்து கொண்டு, கேக் வெட்டி கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், ஏழை மக்களுக்கு வேட்டி சேலைகள், மாற்றுத் திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்..

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் செல்வின், துணை அமைப்பாளர் எம்.கே. பிரதிப், மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலகுருசாமி, தொண்டர் அணி அமைப்பாளர்கள் ரமேஷ், முருகஇசக்கி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ருபன், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மாநகர மருத்துவ அணி அமைப்பாளர், சரவணகுமார்,வட்ட செயலாளர் ரவீந்திரன், அலாவுதீன், ராஜா, மீனவர் அணி துணைச் செயலாளர் ஆர்தர் மச்சாது உட்பட பலர் கலந்து கொண்டனர்.தூத்துக்குடி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மற்றம் சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு, நடைபெற்ற பிறந்த நாள் விழாவுக்கு மாவட்ட தலைவர் துரை தலைமை தாங்கினார். விழாவில் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் கலந்து கொண்டு, கேக் வெட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், பி அன் டி காலனி முதியோர் இல்லம், தெப்பகுளம் தெருவில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் இலத்தில் உள்ளவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் குமார், பொருளாளர் அண்டோ, நிர்வாகிகள் கங்கா, ராஜேஸ், சங்கர், முத்துநாயகம், முத்துதுரை, நாகராஜன், சிவகுமார், மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

சிவா கத்தார்Nov 28, 2020 - 11:02:04 AM | Posted IP 162.1*****

udhaya nithi paiyanukkum pirantha naal vila edukkum kaalam vegu viraivil,,,ellam panam ,pathavi padutthum kevala arasiyal.......

Ju ju biNov 28, 2020 - 10:04:34 AM | Posted IP 162.1*****

அவன் அப்பன் ஒரு பெப்பே. இவன் ஒரு பெப்பே.

ArasaamuthuNov 28, 2020 - 10:03:29 AM | Posted IP 162.1*****

இவனுகளுக்கு அறிவே கிடையாதா? யார் இந்த உதயநிதி? சூடு சுரணை இல்லாத தமிழ் மக்கள். Very Shame. அஞ்சுக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு வீணாய்ப்போண இந்த நாதாரிகள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsAnbu Communications
Black Forest CakesThoothukudi Business Directory