» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே காட்டுப் பகுதியில் எலும்புக்கூடு மீட்பு - போலீஸ் விசாரணை

சனி 21, நவம்பர் 2020 8:09:59 PM (IST)

தூத்துக்குடி அருகே காட்டுப் பகுதியில் கிடந்த மனித எலும்புகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணி அருகே காட்டுப் பகுதியில் மனித எலும்புகள் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தட்டபாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு மண்டை ஒடு, மற்றும் எலும்புகள் கிடந்தது. இறந்தவர் ஆணா? அல்லது பெண்ணா? என்பது தெரியவில்லை. 

இறந்து ஒராண்டிற்கு மேல் இருக்கும் எனத் தெரியவந்துள்ளது. எலும்புகளை கைப்பற்றி இரசாயன ஆய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வர்த்தகரெட்டிபட்டி கிராம நிர்வாக அதிகாரி பராசக்தி அளித்த புகாரின் பேரில், தட்டபாறை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் மாயமானவர்களின் விவரம் குறித்து சேகரித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Black Forest CakesAnbu Communications
Thoothukudi Business Directory