» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மழைநீர் தேங்கியுள்ள சாலையை சீரமைக்க கோரிக்கை : தூத்துக்குடி யூனியன் அலுவலகத்தில் மக்கள் முற்றுகை!

சனி 21, நவம்பர் 2020 5:42:55 PM (IST)தங்கம்மாள்புரத்தில் மழைநீர் தேங்கி கிடக்கும் சாலையை சீரமைத்து தரவேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் தூத்துக்குடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

தூத்துக்குடி அருகேயுள்ள சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்திற்குட்பட்ட தங்கம்மாள்புரத்தில் பொதுமக்களுக்கு தேவையான சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் சரிவர செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சிலநாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக தங்கம்மாள் புரத்திலுள்ள அம்மன் கோவிலுக்கு தெற்கே இருந்து சர்ச் தெரு, தெற்கு தெரு மற்றும் புதுமனைக்கு செல்லும் பிரதான சாலையில் மழைநீர் குளம் போல காணப்படுகிறது.

இதனால், இந்த சாலை வழியாக பொதுமக்கள் செல்லமுடியாத நிலையில், அந்த சாலையிலுள்ள வீடுகளுக்குள் தேங்கி கிடக்கும் மழைநீர் சென்று சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தில் பொதுமக்களுக்கான 2 குடிநீர் குழாய்கள் உள்ள நிலையில், அந்த குழாய்களும் தேங்கி கிடக்கும் மழைநீருக்குள் மூழ்கியுள்ளது. மழைநீர் தேங்கி நிற்கும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

இதற்கிடையே இந்த சாலையை சரள்மண் கொட்டி சீரமைப்பதற்கு பதிலாக பெரிய பெரிய கற்கள் மற்றும் கல்குவாரி கழிவுகளை கொட்டி பஞ்சாயத்து நிர்வாகம் சீரமைக்க முயன்றதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதனை தடுத்துநிறுத்தினர். இந்நிலையில் மழைநீர் தேங்கி கிடக்கும் இந்த சாலையை முழுமையாக சீரமைத்து தரவேண்டும், இப்பணிகளை துரிதமாக விரைந்து மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் தூத்துக்குடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர். கிராமமக்கள் முற்றுகையால் யூனியன் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory