» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கரோனாவை காரணம் காட்டி எதிர்கட்சிகளை மத்திய மாநில அரசுகள் முடக்குகிறது: முத்தரசன் பேட்டி

சனி 21, நவம்பர் 2020 5:10:31 PM (IST)

கரோனாவை காரணம் காட்டி எதிர்கட்சிகளை மத்திய, மாநில அரசுகள் முடக்குவதாக நெல்லையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

நெல்லை சிந்துபூந்துறையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் நெல்லை சிந்துபூந்துறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் பாலன் இல்லம் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் மூத்த தலைவர் நல்லகண்ணு, முன்னாள் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மத்திய அரசு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து வரும் 26-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. 

இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவை தெரிவித்துக் கொள்வதுடன் இந்த போராட்டத்தில் பங்கேற்கும், இந்தப் போராட்டத்திற்கு பொதுமக்கள் வியாபாரிகள் விவசாயிகளும் ஆதரவு தர வேண்டும். குறிப்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச்சட்டம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லாபம் தரும் சட்டமாகவே உள்ளது, இந்த சட்டம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக்கொள்ளலாம் என்று கூறியது. ஆனால் இது விவசாயிகளுக்கு சாதகமாக இருக்காது. வியாபாரிகளுக்கு சாதகமாக இருக்கும் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 

அதனை நிரூபிக்கும் வகையில் பெரம்பலூரில் வியாபாரிகள் வெங்காயத்தை டன் கணக்கில் இருப்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு வியாபாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை பார்க்கின்ற பொழுது மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்தச்சட்டம் மூன்று மாதத்திற்குள் தோல்வி அடைந்தது விட்டது என்பதை நிரூபிக்கிறது எனவே இந்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். வரும் 24ஆம் தேதி தமிழகத்தில் மிகப்பெரிய புயலுக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர் செல்வகுமார் தெரிவித்துள்ள ஏற்கனவே தமிழக அரசு கடந்த கஜா புயலின் போது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அதிக அளவில் இழப்பு ஏற்பட்டது. 

எனவே தற்போது புயல் எச்சரிக்கை எழுந்துள்ள நிலையில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் காவிரி டெல்டா பகுதி வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அரசு அறிவித்தது இந்நிலையில் டெல்டா மாவட்டத்தை ஒட்டிய கடற்கரை பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை பார்த்து மவுனம் காக்காது தமிழக அரசு தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திமுகவின் இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

திருக்குவளையில் பிரச்சாரம் மேற்கொண்ட அவரை காவல்துறையினர் கரோனாவை காரணங்காட்டி கைது செய்துள்ளனர். பாஜக மற்றும் அதிமுக அரசு கரோனாவை காரணம் காட்டி அவர்கள் அரசியல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர் அரசு பணத்தை செலவு செய்து அரசு விழாக்களில் தமிழக முதல்வர் மற்றும் அமித்ஷா அரசியல் பேசுகின்றனர். ஆனால் அதே கரோனாவை காரணங்காட்டி எதிர்க்கட்சிகளை முடக்கி வருவது கண்டிக்கத்தக்கது. வேல் யாத்திரை விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்றத்தில் அனுமதி அளிக்க மாட்டோம் என கூறிவிட்டு,நடத்த அனுமதி அளிப்பது அதிமுகவின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற அடிப்படையில் அதிமுக அரசு செயல்படுகிறது . தமிழகத்தில் இரண்டு அணி தான் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை, அமைந்தாலும் அந்த அணி வெற்றி பெறாது, தமிழகத்தில் பாஜக தலைகீழாக நின்றாலும் காலூன்ற முடியாது என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் கடந்த 1978ஆம் ஆண்டு கோயில்களிலிருந்து காணாமல் போன சிலைகள் 42 ஆண்டுகளுக்கு பின்பு லண்டனில் இருந்து மீட்கப்பட்டுள்ளது, சிலைகள் மீட்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றாலும், சிலையை கடத்தியவர்கள் யார், இதில் யார் காப்பாற்றப் படுகிறார்கள் இதற்கெல்லாம் முதல்வர் கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory