» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து 8 சிறுவர்கள் காயம்

சனி 21, நவம்பர் 2020 4:09:08 PM (IST)

தூத்துக்குடியில் பட்டாசுகளுக்கு மொத்தமாக தீவைத்து எரித்தால் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 8 சிறுவர்கள் காயம் அடைந்தனர். 

தூத்துக்குடி முத்தையாபுரம் வடக்கு தெருவில், அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தீபாவளிக்கு மீதமான பட்டாசுகளை மொத்தமாக தீவைத்து எரித்துள்ளனர். அப்போது பட்டாசு வெடித்து சிதறியதில் அப்பகுதியைச் சேர்ந்த மனோகர் மகன் கணேஷ் (8), பாலமுருகன் மகன் பாலசூர்யா (8), முருகன் மகன் சங்கரலிங்கம் (16), சங்கர் மகன் கணேஷ் (12), நல்லதம்பி மகன் காளீஸ்வரன் (11), கருப்பசாமி மகன் முகேஸ் (7), பொன்ராஜ் மகன் சிவசந்துரு (13), சந்தான செல்வம் மகன் பாலமுருகன் (6) ஆகிய 8 சிறுவர்கள் பலத்த காயம் அடைந்தனர். 

இவர்களில் சிலருக்கு கண்களிலும், சிலருக்கு கை கால்களிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த சிறுவர்கள்  அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் விசாரணை நடத்தி வருகிறார். பட்டாசு வெடித்து சிறுவர்கள் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory