» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வடகிழக்கு பருவழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை : வருவாய்த்துறை நிர்வாக ஆணையாளர் ஆய்வு

சனி 21, நவம்பர் 2020 3:53:21 PM (IST)தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 5 தாழ்வான பகுதிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி, ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவழை 2020 தொடர்பான ஆய்வு கூட்டம் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி, தலைமையில் இன்று (21.11.2020) நடைபெற்றது. கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

இக்கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பான மழை அளவு குறித்தும், தற்போது பெய்துள்ள மழை அளவு குறித்தும் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மூலம் ஆண்டுதோறும் 65 சதவிதம் மழையானது பெறப்படுகிறது. இந்த மழையை பேரிடராக கருதாமல் மழைநீரை சேமிக்க வேண்டும் என்று அறுவுறுத்தினார். 

உள்ளாட்சி நிர்வாகங்கள் கரோனா தொற்று காலத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு அதுபோல கூடுதல் மழை பொழிவு போதும் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் சிறப்பாக செயல்பட வேண்டும். அடுத்து பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் மீட்பு முகாம்களில் அலுவலர்கள் ஆய்வு செய்து அங்கு பொதுமக்கள் தங்க வைக்க மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயாராக உள்ளதா என்பதை உறுதிபடுத்த வேண்டும்.

மேலும் இந்த முகாம் பகுதியில் பொதுமக்களை தங்க வைக்கும்போது கரோனா தடுப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறுவுறுத்தினார். தொடர்ந்து பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு மூலம் குளங்களில் நீர்வரத்துகள் குறித்தும், பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் 16.22.2020 அன்று 17 செ.மி. மழை பெய்ததன் காரணமாக மழை நீர் தேங்கியுள்ள தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 5 தாழ்வான பகுதிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர்களிடம் ஆய்வு செய்தார். 

மேலும் சுகாதாரத்துறை மூலம் மழை காலங்களில் ஏற்படக்கூடிய தொற்று நோய்கள் பரவமால் விரைந்து செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார். தீயணைப்பு துறை மூலம் மீட்பு பணிகள் தொடர்பாக மீட்பு கருவிகளின் நிலை குறித்து ஆய்வு செய்தார். மேலும் கருவிகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்க அறுவுறுத்தினார். தொடர்ந்து காவல் துறை மூலம் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு செய்தார். மேலும் ஊரக வளர்ச்சி முகமை மூலம் பராமரிக்கப்படும் குளம் மற்றும் குட்டைகளின் நிலை குறித்து ஆய்வு செய்தார். கரைகள் பலமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார். மேலும் அனைத்து துறைகளும் பேரிடர் காலங்களில் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட முன்கூட்டியே முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறுவுறுத்தினார்.

பின்னர் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி, செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி இன்றைக்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் பெய்த கன மழையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியிலும் காயல்பட்டணம் பகுதியிலும், விளாத்திக்குளம் பகுதியிலும் ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகமும் இணைந்து செயல்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. அனைத்து துறைகளும் பேரிடர் காலங்களை சமாளிக்க ஆயத்த நிலையில் இருக்கின்றன. எந்தவிதமான மழை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு எல்லா துறைகளும் இணைந்து செயல்படுவதற்கு ஆயத்த நிலையில் இருக்கின்றன.

பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைக்க தேவையான இடங்கள் எல்லாம் தயார் நிலையில் இருக்கின்றன. முக்கிய அலுவலர்கள் அங்கு சென்று அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்திருக்கிறார்கள். ஒரு வேளை பாதிப்பு ஏற்பட சூழ்நிலை இருந்தால் பொதுமக்களுக்கு தக்க நேரத்தில் தகவலை தெரிவித்து அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற துரிதமாகவும், தேவையான அளவிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மற்ற நகராட்சி மற்றும் கிராம பகுதிகளில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவாக தேங்கியுள்ள தண்ணீர் அகற்றப்படும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, வருவாய் கோட்டாட்சியர்கள் விஜயா, (கோவில்பட்டி), தனப்ரியா (திருச்செந்தூர்), சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் கிருஷ்ணலீலா, அனிதா, மாநகராட்சி நல அலுவலர் அருண்குமார், மாநகராட்சி தலைமை பொறியாளர் சேர்மக்கனி, பொதுப்பணித் துறை (நீர்வள ஆதார அமைப்பு) செயற் பொறியாளர்கள் பத்மா, அண்ணாத்துரை, உதவி இயக்குநர் ஊராட்சிகள் உமாசங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணி மற்றும் துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Black Forest Cakes

Anbu Communications


Thoothukudi Business Directory