» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜாதி கோஷ்டி பூசலில் தூத்துக்குடி பாஜக - அதிர்ச்சியில் தொண்டர்கள்!

சனி 21, நவம்பர் 2020 12:25:45 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட பாஜகவில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

இது குறித்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர் கூறியதாவது : தமிழக பாஜக மாநில தலைவராக இல கணேசனுக்கு பின்னர் தமிழிசை சவுந்திர ராஜன் நியமிக்கப்பட்ட பின்னர் தூத்துக்குடி மாவட்ட பாஜகவில் செயல்பாடுகளில் வேகம் அதிகரித்தது. தொண்டர்கள் சிறப்பாக செயல்பட்டு வந்தனர். தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர், பாஜக மாநில தலைவராக எல் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், தமிழகம் முழுவதும் வேல்யாத்திரை சென்று வருகிறார். 

தூத்துக்குடி மாவட்ட பாஜகவில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பதவிகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு மட்டுமே பதவிகள் வழங்கப்படுவதாவும், பிற சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை புறக்கணிப்பதாகவும் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இதற்கு உதாரணமாக, தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளராக இருந்து திருச்செந்தூரைச் சேர்ந்த நெல்லையம்மாள் தற்போதைய மாவட்டத் தலைவரால் நீக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் கட்சியின் மேலிடத்தி்ன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  பின்னர் தேசிய அளவிலான தலைவர் ஒருவர் தலையிட்டதன் பேரில்,  சிறப்பாக கட்சிப் பணியாற்றியதால், நெல்லையம்மாளுக்கு மாநில அளவில் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

நெல்லையம்மாளுக்கு மாநில அளவில் பதவி வழங்கப்பட்டிருப்பது தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், பழைய நிர்வாகிகளை மாவட்ட பாஜக புறக்கணித்து வருவது தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ்நாட்டில் பாஜக சாதிக்க வேண்டிய செயல்கள் இன்னும் பல உள்ளதால் சாதிக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடாது என்பதே அடிமட்ட தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory