» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது - எஸ்பி அதிரடி

சனி 21, நவம்பர் 2020 11:57:05 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 20.10.2020 அன்று தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீளவிட்டான் காட்டு பகுதியில் தூத்துக்குடி மில்லர்புரம் என்ஜிஓ காலனியை சேர்ந்த கருப்பசாமி மகன் கதிரேசன் (31) என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். 

இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து முத்தையாபுரம் தங்கம்மாள் புரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுந்தர்ராஜ் (28) மற்றும் அவரது நண்பர்களான முத்துக்குமார் (19), நவீன் (20), ஆரோக்கிய செல்வம் (20) ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கின் முக்கிய எதிரியான சுந்தர்ராஜ் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் அறிக்கை தாக்கல் செய்தார்.

கடந்த 22.10.2020 அன்று கயத்தார் பஜார் பகுதியில், கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த மாடசாமி மகன் ஊர்காவலன் (61) அவரது மகன் பசுபதி பாண்டியன் (20) ஆகியோர் ஒருவரிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கயத்தார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரிகளான ஊர்காவலன் மற்றும் பசுபதி பாண்டியன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் முத்து அறிக்கை தாக்கல் செய்தார்.

மேற்படி ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் 3பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், 3பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் சம்மந்தப்பட்ட  3பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes






Anbu Communications




Thoothukudi Business Directory