» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.1¾ லட்சம் மதிப்புள்ள பறவைகள் திருட்டு : போலீஸ் விசாரணை

சனி 21, நவம்பர் 2020 11:40:58 AM (IST)

தூத்துக்குடியில் வழக்கறிஞர் வீட்டில் வளர்த்து வந்த ரூ.1¾ லட்சம் மதிப்புள்ள 13 பறவைகள் திருடுபோனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மில்லர்புரம் மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் சிங்கராஜ் (57). இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரது மொட்டை மாடியில் வெளிநாட்டு பறவைகள் வளர்த்து வருகிறாராம். இந்நிலையில் நேற்று இரவு கூண்டில் அடைத்து வைத்திருந்த 13 பறவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டார்களாம். இதன் மதிப்பு ரூ.1.75 லட்சம் ஆகும். இதுகுறித்து சிங்கராஜ், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Black Forest Cakes



Anbu Communications




Thoothukudi Business Directory