» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தலை தீபாவளி சீர்வரிசை கேட்டு புதுப்பெண் மீது வெந்நீரை ஊற்றிய மாமியார், கணவர் மீது வழக்கு

வெள்ளி 20, நவம்பர் 2020 11:41:34 AM (IST)

தூத்துக்குடி அருகே தலை தீபாவளிக்கு சீர்வரிசை கொண்டு வராததால் புதுப்பெண் மீது வெந்நீரை ஊற்றிய மாமியார் மற்றும் கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகேயுள்ள நடுவக்குறிச்சி கிராமம், காமராஜ் நகரைச் சேர்ந்தவர் வேல்ராஜ். பெட்ரோல் பல்கில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி அபிராமி (25). தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவத்தில வேலைபார்த்து வருகிறார். இந்த தம்பதியருக்கு திருமணமாகி 8 மாதங்களாகிறது. திருமணத்தின்போது பெண் வீட்டார், 9 பவுன் நகையும், ரூ.10ஆயிரம் ரொக்கமும் வரதட்சனையாக கொடுத்தார்களாம்.

இந்நிலையில், தலை தீபாவளிக்கு அபிராமி சீர்வரிசை கொடுக்கவில்லை என்று கூறி அவரது மாமியார் ஆண்டிதாய் அவரை திட்டினாராம். மேலும் ஆத்திரத்தில்  அபிராமியின் முகத்தில் வெந்நீரை ஊற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், மாமியார் ஆண்டித்தாய் மற்றும் அவரது கணவர் வேல்முருகன் மீது புதியம்புத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes




Anbu Communications





Thoothukudi Business Directory