» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் : பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!

திங்கள் 16, நவம்பர் 2020 5:34:29 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என  மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறும், வீட்டில் மின் சாதனங்களை மிகவும் கவனமாக கையாளுமாறும், வெளியில் செல்லும் போது மின் கம்பிகளோ, கம்பங்களோ சரிந்த நிலையில் உள்ளனவா எனவும், குழிகள் ஏதும் உள்ளனவா எனவும் பார்த்து கவனமாக செல்லுமாறும், பழுதடைந்த கட்டிடங்களில் மழைக்கு ஒதுங்க வேண்டாம் எனவும்

இரவு நேரங்களில் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் எனவும், அத்தியாவசிய தேவைகளுக்காக செல்ல நேரிட்டால் விஷ பூச்சிகளிடமிருந்து தங்களை காப்பாற்றி கொள்ளும் வகைக்கு கையில் டார்ச்லைட் மற்றும் கைத்தடியுடன் செல்லுமாறும், இடி மின்னலின் போது வெட்டவெளி, மரங்கள் மற்றும் கட்டிடங்களின் வெளியே நிற்க வேண்டாம் எனவும், ஆறு , வாய்க்கால், குளம் மற்றும் குட்டைகளில் குளிக்க செல்ல வேண்டாம் எனவும் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் குடிநீரை நன்கு கொதிக்க வைத்து பயன்படுத்திடவும், காய்ச்சல், இருமல், ஜலதோஷம் மற்றும் வயிற்றுபோக்கு போன்றவை தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பேரிடர் தொடர்பான அவசர தேவைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் : 1077, தொலைபேசி எண்: 0461-2340101 மற்றும் வாட்ஸ் அப் எண் : 94864 54714 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி.செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products

Black Forest CakesNalam Pasumaiyagam


Thoothukudi Business Directory