» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா நாளை துவக்கம்: வழிகாட்டு நெறிமுறைகளை கோயில் நிர்வாகம் அறிவிப்பு

சனி 14, நவம்பர் 2020 6:00:06 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நாளை(15ம் தேதி) யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது. பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கோயில நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் கந்த சஷ்டி திருவிழா உலக பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலக அளவிலிருந்து பக்தர்கள் வந்து விரதமிருப்பது தனிசிறப்பாகும். ஆனால் இந்தாண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கந்த சஷ்டி விழாவில் விரதமிருக்க அனுமதியளிக்கப்படவில்லை. ஊரடங்கு அமலில் உள்ளதால் அறநிலையத்துறை ஆணையரால் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நடக்கிறது. நடக்கிறது. இத்திருவிழா நாளை(15ம் தேதி) துவங்கி வரும் 26ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. 20ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.

சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நாளை(15ம் தேதி) யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது. இதையொட்டி அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடக்கிறது. கோயில் உள்பிரகாரத்தில் வள்ளி & தெய்வானை சன்னதிக்கிடையே உள்ள யாகசாலை மண்டபத்தில் காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடக்கிறது. அங்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கும்பபூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து பூர்ணாகுதி தீபாராதனை ஆனதும் யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் நடக்கிறது. பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனை ஆனதும் யாகசாலையில் மகா தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி ஜெயந்திநாதருக்கு திபாராதனை நடக்கிறது. மாலையில் அதே இடத்தில் சுவாமி ஜெயந்தநாதருக்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடக்கிறது.

தொடர்ந்து மற்ற நாட்களில் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.சூரசம்ஹாம் மற்றும் திருக்கல்யாண ஆகிய இருநாட்கள் விழாவை காண பக்தர்கள் அனுமதிஇல்லை.மற்ற நாட்களில் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அதிகாலை 5 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் தங்கள் வீடுகளிலேயே விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். கோயிலில் விரதமிருக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. கோயில் பிரகாரத்தில் பக்தர்கள் தங்க அனுமதியில்லை. கோயில் வளாகத்தில் மாலை 6 மணிக்கு மேல் இருப்பதற்கு அனுமதியில்லை. கோயில் விடுதிகளில் உள்ள அறைகள் வாடகைக்கு விடபட மாட்டாது.

* சஷ்டி விழாவில் மாலையில் சுவாமி சுவாமி ஜெயந்தி நாதர் கிரி பிரகார உலா இந்தாண்டு நிறுத்தப்பட்டுள்ளது.

* பக்த்ரகள் கடல் மற்றும் நாழிகிணற்றில் நீராட அனுமதியில்லை.

* பக்தர்கள் தேங்காய், பழம், மாலைகள் மற்றும் பூஜை பொருட்கள் கொண்டு வர அனுமதியில்லை.

* காது குத்து அனுமதியில்லை.

* பக்தர்களுக்கு அன்னதானம் கோயில் மூலம் பொட்டலங்களாக வழங்கப்படும்.

* திருவிழா நாட்களில் அனைத்து நிகழ்வுகளையும் வரும் 15ம் தேதி முதல் வரும் 19ம் தேதி வரை காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை யாகசாலை பூஜை மற்றும் மாலை 4 மணி முதல் மாலை 4.30 மணி வரை சுவாமி ஜெயந்திநாதர் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை, சூரசம்ஹாரம் நடக்கும் 20ம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கும் சுவாமி ஜெயந்திநாதர் அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்வு, 21ம் தேதி மாலை 6 மணிக்கு மாலை மாற்றுதல், இரவு 11 மணி திருக்கல்யாண நிகழ்ச்சி ஆகியவை கோயில் வலைதள நேரலையில் ஒளிப்பரப்பபடும்.

* கோயிலுக்கு வரும் பக்தர்கள கட்டாயம் முக கவசம் அணிதிருக்க வேண்டும். ஆதார் அடையாள அட்டை நேரில் கொண்டுவர வேண்டும். பக்தர்கள் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory