» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு : எஸ்பி ஜெயக்குமார் அறிவிப்பு

சனி 7, நவம்பர் 2020 12:41:30 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படைக்கு 31 ஆண்கள் மற்றும்  9 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படைக்கு (Home Guards) 31 ஆண்கள், 9 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேர்வில் கலந்து கொள்வதற்கு 10ம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றவர்களாகவும், 18 வயதுக்கு குறையாமலும், 45 வயதுக்கு மிகாமலும் இருப்பவர்களாகவும், தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்களாகவும், எவ்வித குற்ற பின்னணி இல்லாதவராகவும் இருக்க வேண்டும். 

இதில் ஆர்வம் உள்ள பொதுமக்கள், அரசு பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், சுய தொழில்புரிவோர் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம். மேற்கண்ட தகுதி உள்ளவர்கள் 2 மார்பளவு புகைப்படம் (Passport Size photo), கல்வித்தகுதிச் சான்று, ஆதார் அட்டை மற்றும் இருப்பிடச்சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்களுடன் வரும்   24.11.2020 செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு  தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் (District Police Office) நேரில் ஆஜராக வேண்டும்.

ஊர்க்காவல் படைவீரர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு காவல்துறையினரின் மூலம் 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.ஊர்க்காவல் படை வீரர்களுக்கு மாதத்திற்கு 5 நாட்கள் மட்டுமே  பணி வழங்கப்படும். அவ்வாறு பணிபுரியும் ஊர்க்காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு மதிப்பூதியமாக ரூபாய் 560ஃ- வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்றும் இத்தேர்வுக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க தேவையில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

Gokul perumalNov 9, 2020 - 10:40:16 PM | Posted IP 173.2*****

12th pass

B MARISVAMNov 9, 2020 - 08:54:01 PM | Posted IP 162.1*****

சார் எனக்கு போலிஸ் வேலை எநக்கு ரோம்பிடிக்கும் நாண் உரிதி எடுக்கிரேண் நான் போலிஸ் அனால் குடிபோதயில் எராவது பேண்கலை அவதுரா பேசிநால் அடி கோத்துதிருத்துவேண்

Balasubramanian.SNov 7, 2020 - 07:07:09 PM | Posted IP 162.1*****

எனக்கு Police வேலை ரொம்ப பிடிக்கும்.But எப்படி Police வேலைக்கு செல்வது என்று தான் தெரியல. எதுவும் தப்பா சொல்லி இருந்தா மன்னிக்கவும்....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory