» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆமை வேகத்தில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பணிகள் : மாநகராட்சி நிர்வாகத்திற்கு காங்கிரஸ் கண்டனம்

சனி 7, நவம்பர் 2020 12:18:50 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ். முரளிதரன் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்க பணிகள் மற்றும் பதிதாக பேருந்து நிலையம் அமைத்தல், வடிகால் பராமரித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு மழை காலம் தொடங்கிய போது எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் இயங்கி வரும் பழைய பேருந்து நிலையத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். 

பல பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததால் இரு சக்கர வாகன ஒட்டிகள்அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை. ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.இந்த ஆண்டாவது பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதை தவிர்க்கும் வகையில் பணிகள் விரைவு படுத்துவதோடு குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தும் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். 

மழை காலம் தொடங்கிய பிறகு தார் சாலை அமைக்கும் பணி நடைபெறுவது விந்தையிலும் விந்தையாக உள்ளது. புதிதாக போடப்படும் தார் சாலைகள் மழையால் மீண்டும் குண்டும் குழியுமானால் தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகராட்சி நிர்வாகம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். அதே போன்று பக்கிள் ஓடையைஉடனடியாக சீரமைக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பக்கிள் ஓடையில் சுற்றுபுற சுவர் அமைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory