» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆயுதபூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் விற்பனை ஜோர்

சனி 24, அக்டோபர் 2020 4:49:59 PM (IST)

தூத்துக்குடியில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூ, தேங்காய் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. 

சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுதபூஜை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூஜைக்கு தேவையான முக்கிய பொருட்களான தேங்காய், வாழைப்பழம், வாழை இலை போன்றவைகளை அதிக அளவில் காய்கறி மார்க்கெட்டில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதேபோல் சிறிய அளவிலான வாழை மரங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. பூஜை பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனத்தினர் மார்க்கெட்டிற்கு வந்தனர். 

இதேபோல் சுண்டல், பொறி, கடலை போன்றவை சிறியது முதல் பெரிய பாக்கெட் வரை கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதனையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். பூ மார்க்கெட்டிற்கு வெளியூர்களில் இருந்து அதிக அளவில் பூக்கள் கொண்டு வரப்பட்டது. தூத்துக்குடி மற்றும் வெளியூர்களை சேர்ந்த ஏராளமான பூ வியாபாரிகள் அதிக அளவில் பூக்களை வாங்கிச் சென்றனர். வாழை இலை, வாழைப்பழம் மற்றும் பூக்கள் விற்பனை அதிகரித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes








Thoothukudi Business Directory