» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க விழிப்புணர்வு கருத்தரங்கில் வலியுறுத்தல்

சனி 24, அக்டோபர் 2020 4:06:03 PM (IST)பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

சமூக பாதுகாப்புத் துறை ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சேதுக்குவாய்த்தான்  பஞ்சாயத்து நிர்வாகம்  மற்றும்  மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் சமுதாயக் கூடத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேதுக்குவாய்த்தான் பஞ்சாயத்து தலைவர் சுதா சீனிவாசன் வரவேற்றார் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் எஸ் ஜே கென்னடி முன்னிலை வகித்தார் 

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு  அலுவலர் க மகராசி தலைமை தாங்கினார். குழந்தைகள் நலக்குழு தலைவர் தாம்சன் தேவசகாயம் சிறப்புரையாற்றினார். சைல்டு லைன் 1098 ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசேகர் வழக்கறிஞர் பா சீனிவாசன் கிராம வறுமை ஒழிப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் தமிழரசி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு பாதுகாப்பு அலுவலர் பி ஜேம்ஸ் அதிசய ராஜா செல்வி பிளாரன்ஸ் ஆகியோர் விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர். 

இதில்  குழந்தைகள் பாதுகாப்பு அலகு நோக்கம் இலக்கு செயல்பாடுகள் குழந்தைகள் என்பவர்கள் யார் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள் குழந்தைகளின் உரிமைகள் குழந்தை தொழிலாளர் முறை குழந்தைகள் தொடர்புடைய சட்டங்கள் குழந்தை கடத்தல் தடுக்கும் முறைகள் குழந்தை திருமணம் குழந்தை திருமணம் பற்றி யாரிடம் புகார் கொடுப்பது சைல்டு லைன் 1098 பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பிற்கான சட்டங்களை சிறப்பு அம்சங்கள் குழந்தை நேய நடைமுறை குழந்தை நேய சூழல் இளைஞர் நீதி குழந்தைகள் நலக்குழு இளைஞர் நீதி குழுமம் மற்றும் செயல்பாடுகள் நமது கடமை குழந்தைகளை பாதுகாப்போம் வளமான சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற தலைப்புகளில் கருத்துரை வழங்கப்பட்டது 

இதில் சேதுக்குவாய்த்தான் ஜமாத் தலைவர் வசூர் ஊராட்சி செயலாளர் மாரி ராஜ் அனைத்து வார்டு உறுப்பினர்களும் மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களும் பொதுமக்களும் திரளானோர் கலந்து கொண்டனர் முடிவில் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி நன்றி கூறினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Black Forest CakesAnbu Communications
Thoothukudi Business Directory