» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசை தசரா திருவிழா: கஜலெட்சுமி திருக்கோலத்தில் அம்மன் பவனி!!

சனி 24, அக்டோபர் 2020 12:53:40 PM (IST)குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் இன்று 8ம் திருநாளில் கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி பவனி வந்தார். 

குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த அக்.17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அன்னை முத்தாரம்மன் ஒவ்வொரு வாகனத்தில் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். நேற்று அக்.23ம் தேதி 7ம் திருநாளில் மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் எழுந்தருளி உட்பிரகார பவனி நடந்தது.

இன்று (அக்.24) 8ம் திருநாளில் கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். கரோனா நோய் பரவலையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பிரமாண்டமாக நடைபெறும் தசரா குழுக்களின் ஆட்டம் பாட்டம் தடை பட்டுள்ளது. ஒரு சில தசரா குழுக்கள் மட்டும் வேடம் அணிந்து தங்களது ஊர்களில் மட்டும் கலைநிகழ்ச்சிகள் நடத்திவருகின்றனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Anbu CommunicationsBlack Forest Cakes
Thoothukudi Business Directory