» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முதல்வர் வருகைக்காக அவசர கதியில் தரமற்ற சாலை : அதிகாரிகளை கண்டித்து வாலிபர் சங்கம் போராட்டம்!

சனி 24, அக்டோபர் 2020 12:37:01 PM (IST)தூத்துக்குடியில் முதல்வர் வருகையை முன்னிட்டு அவசர கதியில் தரமற்ற சாலை அமைக்கப்பட்டதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நூதன போராட்டம் நடந்தது. 

தூத்துக்குடி, பாளை ரோட்டில் மேம்பாலம் தேவர் சிலை அருகே முதல்வர் வருகைக்காக கடந்த 22ம் தேதி சாலை அமைக்கப்பட்டது. அவசர கதியில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள அந்த  சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பாடும் அபாயம் உள்ளது. மக்களின் வரிப்பணத்தை வீணடித்து தரமற்ற சாலை அமைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று மலர்வளையம் வைக்கும் நூதன போராட்டம் நடந்தது. 

 மாவட்ட செயலாளர் முத்து தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநகர தலைவர் காஸ்ட்ரோ, மாநகர பொருளாளர்  பாலா,  எஸ்எப்ஐ Iமாவட்டசெயலாளர் ஜாய்சன், ஜேம்ஸ், முத்துகிருஷ்ணன், மாவட்டக்குழு ஆவடையப்பன்,  ஜெயமுருகன், அஜெய், கார்த்தி, மகராஜன், வேனு சுயம்பு உட்பட பலர் கலந்து கொண்டு, தரமற்ற சாலையை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வே்ணடும். விபத்து ஏற்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.   


மக்கள் கருத்து

செல்வராஜ்Oct 25, 2020 - 08:02:16 PM | Posted IP 162.1*****

ஜார்ஜ் ரோட்டில் பெல் ஹோட்டலில் இருந்து காமராஜ் கல்லூரி வரை நன்றாக இருந்த சாலையை இயந்திரத்தின் உதவியோடு. யாரும் அந்த்பகுதியில் உள்ள கிருஸ்தவ கோவில்களுக்கு செல்ல முடியாத அளவு நாசப்படுத்தியது மத ரீதியிலான திட்டமிட்ட சதியா என மக்கள் கொதித்து கொண்டிருக்கிறார்கள் இதை எந்த அரசியல் கட்சிகளும் கண்டு கொள்ளவில்லை

பிச்சையாOct 24, 2020 - 01:14:23 PM | Posted IP 162.1*****

மனோ மண்டபம் தொடங்கி மாதா கோவில் வரை ரோடே இல்ல ... 2 மாதம் ஆச்சு ... கொஞ்சம் அந்த செய்தியையும் போடுங்க

rajkumarOct 24, 2020 - 12:54:29 PM | Posted IP 108.1*****

AYYA VARRATHUKU VVD SIGNAL ROADE PALA PALA NU AKITU

rajkumarOct 24, 2020 - 12:54:00 PM | Posted IP 108.1*****

VALTHUKAL BRO

rajkumarOct 24, 2020 - 12:53:48 PM | Posted IP 108.1*****

THARAMANA SAMBAVAM

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Anbu Communications

Black Forest Cakes


Thoothukudi Business Directory