» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே இளம்பெண் திடீர் மாயம்!

சனி 24, அக்டோபர் 2020 11:42:58 AM (IST)

தூத்துக்குடி அருகே இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி அருகேயுள்ள செபத்தையாபுரம் சாாமிக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுயம்புராஜ். இவரது மகள் நித்யா (19), கடந்த 22ம் தேதி, வீட்டை விட்டு சென்றார். அதன் பின்னர் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சாயர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அவரது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையில் சாயர்புரம் அருகேயுள்ள பட்டாண்டிவிளையைச் சேர்ந்த செபஸ்டின் மகன் பிரவீன்குமார் (22) என்பவரை நித்யா காதலித்து வந்ததாகவும், இருவரும் ஊரைவிட்டுச் சென்றுவிட்டதாகவும் தெரியவந்தது. இதையடுத்து மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes







Anbu Communications



Thoothukudi Business Directory