» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீடு கட்டியதில் ரூ.10¼ லட்சம் மோசடி: உரிமையாளர் மீது வழக்குப் பதிவு

சனி 24, அக்டோபர் 2020 11:33:02 AM (IST)

கோவில்பட்டியில் வீடு கட்டியதில் கான்ட்ராக்டருக்கு ரூ.10¼ லட்சத்தை கொடுக்காமல் மோசடி செய்தாக வீட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நடராஜபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் மாரியப்பன் (65), பில்டிங் கான்ட்ரக்டரான இவர், படர்ந்தபுளி மேலத் தெருவைச் சேர்ந்த சுவாமியப்பன் மகன் சின்னத்துரை என்பவருக்கு ரூ.21 லட்சம் மதிப்பில் வீடு கட்டிக் கொடுக்க ஒப்பந்தம் செய்துள்ளார். 

இதற்கு முன் பணமாக சின்னத்துரை ரூ.10¾ லட்சம் கொடுத்துள்ளார். வீடு கட்டி முடிந்து 3 மாதங்களாகியும் மீதி பணம் ரூ.10.¼ லட்சத்தை அவர் கொடுக்கவில்லையாம். பணத்தை கேட்டதால் மாரியப்பனுக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் மாரியப்பன் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes








Thoothukudi Business Directory