» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத போதகர்களிடையே மோதல் ‍ 4பேர் மீது வழக்குப் பதிவு

சனி 24, அக்டோபர் 2020 11:11:50 AM (IST)

கோவில்பட்டியில் மத போதகர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பைச் சேர்ந்த 4பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்தவர் பிளாரன்ஸ் மகன் பிலிப் ஆதாம் (33). இவர் அங்குள் ஏஜி கிறிஸ்தவ சபையில் போதகராக  உள்ளார். அதே சபையில் பாக்கியநாதன் (53) என்பவரும் போதகராக உள்ளார். இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. 

இந்நிலையில், பாக்கியநாதன் மற்றும் அவரது மகன் செபஸ்டின் சாமுவேல், சபை ஊழியர் முத்து, ஆகிய பிலிப் ஆதாம் ஆகிய மூவரும் தனது வீட்டிற்குள் நுழைந்து, 3 சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பிலிப் ஆதாம் புகார் அளித்துள்ளார். 

அவரது புகாரின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் முத்து விஜயன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இதுபோல் பாக்கியநாதன், "தன்னை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பிலிப் ஆதாம் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் பிலிப் ஆதாம் மீது இன்ஸ்பெக்டர் சுபேசன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

சிவா கத்தார்Oct 25, 2020 - 09:19:12 AM | Posted IP 162.1*****

ivanaka ellorum yaaru namma pillaikal than ,inke ithe piratchanai pannittu anke ponavanaka than ,ivanka enke irunthalum ippati than,ivanakala THAI matham vaanu kuppita vendam....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsAnbu Communications


Black Forest Cakes


Thoothukudi Business Directory