» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்களை இழிவாக பேசிய திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் : சசிகலா புஷ்பா பேட்டி!

சனி 24, அக்டோபர் 2020 10:20:34 AM (IST)பெண்களை இழிவாக பேசியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி, அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், பெண்கள் குறித்தும், மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில், அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து திருமாவளவன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடமும் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, திருமாவளவன் பேட்டியை போலீஸார் ஆய்வு செய்தனர். பின்னர், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்தனர். இதையடுத்து கலகம் விளைவிக்கும் ஒரு கருத்தோடு செயல்படுதல், சமயம் இனம் சார்ந்து வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகைமையை உருவாக்குதல், மத உணர்வை புண்படுத்தும் சொற்களை சொல்லுதல் உட்பட 6 பிரிவுகளின்கீழ் திருமாவளவன் மீது சைபர் கிரைம் போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்திப் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலானது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த பாஜக நிர்வாகியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சசிகலா புஷ்பா தொல் திருமாவளவனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இந்து பெண்களை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் இந்து பெண்கள் அனைவரும் பரத்தையர்களாக படைக்கப்பட்டவர்கள் என கூறியுள்ளார். திமுகவில் கடவுளை வழங்கும் இந்து பெண்கள் ஏராளம் பேர் உள்ளனர். அப்படி எனில் திருமாவளவனின் இந்த பேச்சு அவர்களையும் இழிவுபடுத்துவதாக ஆகும். எனவே திருமாவளவனின் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்?. அவருடைய இந்த அநாகரிகமான பேச்சுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவேண்டும். திருமாவளவனும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory