» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வருவாய் துறை அலுவலர்கள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம்

செவ்வாய் 20, அக்டோபர் 2020 6:03:53 PM (IST)



தமிழக அரசின் வருவாய் மற்றும் மேலாண்மை துறையில் பணியாற்றி வரும் வருவாய் துறை அலுவலர்களின் குறைந்த பட்ச எதிர்பார்ப்புகள் பனி வரன்முறை, பதவி உயர்வு, ஊதிய முரண்பாடுகள், கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட வருவாய் துறை அலுவலர்கள், விபத்தில் இறந்தவர்களுக்கு நிவாரண தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட அரசு காலதாமதம் செய்வதை கண்டித்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் இன்று அலுவலகம் நேரம் முடிவதற்கு ஒரு மணி முன்பு வெளிநடப்பு செய்து மாவட்டம் மற்றும் வட்டத்தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்ய தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் முடிவு செய்தது. 

அதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் மாவட்ட துணைத்தலைவர் ஞானராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தூர்ராஜன் விளக்கவுரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தே.முருகன், மாநில துணைத்தலைவர் என்.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் ராமச்சந்திரன் நன்றியுரையாற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes




Anbu Communications






Thoothukudi Business Directory