» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தில் மீனவர்களுக்கு வீடு: அக்.23-க்குள் விண்ணப்பிக்கலாம்

செவ்வாய் 20, அக்டோபர் 2020 5:46:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வீடற்ற மீனவர்கள் மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் காண்கீரிட் வீடுகள் பெறுவதற்கு 23.10.2020-க்குள் விண்ணப்பிக்கலாம் - 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு : மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் வீடற்ற மீனவர்களுக்கு பிரதமமந்திரி குடியிருப்புத் திட்ட வழிமுறைகளை பின்பற்றி பயனாளி நிலத்தில் ரூ.1.70 இலட்சம் மதிப்பில் காண்கீரிட் வீடுகள் கட்டித்தர தூத்துக்குடி மாவட்டத்திற்கு 250 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் தங்களது விண்ணப்பத்தை மீன்வளத்துறையில் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான மீனவ பயனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக துறை மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விதிக்கப்பட்ட நிபந்தனைகள்

1. பயனாளிகள் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த மீனவ கிராம மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

2. பயனாளிகள் பெயரில் சொந்த நிலம் இருத்தல் வேண்டும். வீடு கட்டுவதற்குரிய நிலத்திற்கான பட்டா பயனாளியின் பெயரில் இருத்தல் வேண்டும்.

3. பயனாளி அல்லது அவரது துணைவியார் பெயரிலோ வேறெந்த சொந்த வீடோ அல்லது அரசு துறை மூலமோ வீடு எதுவும் பெற்றிருத்தல் கூடாது.

4. மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்பு தொகை ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் இத்திட்டம் தொடர்பான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளுக்கும் உட்பட்டு வீடுகட்ட சம்மதிக்கிறேன் என்ற ஒப்புதல் கடிதம் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

5. பயனாளிகள் நிலம் கடற்கரை ஒழுங்காற்றுச் சட்ட (CRZ) மண்டலத்தில் கட்டுமானம் கட்ட தடைசெய்யப்பட்ட (No Development Zone )பகுதியில் இருத்தல் கூடாது.

மேற்படி விதிமுறைகளுடன் கூடிய தகுதியுள்ள பயனாளிகள் அந்ததந்த மீனவர் கூட்டுறவு சங்க தலைவரிடமோ அல்லது மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகவோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை 23.10.2020-க்குள் சமர்ப்பிக்கவும். கூடுதல் விவரங்களுக்கு தூத்துக்குடி மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461-2320458/9384824279 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Black Forest Cakes
Anbu CommunicationsThoothukudi Business Directory