» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி - மைசூர் பண்டிகை கால சிறப்பு ரயில்கள்

செவ்வாய் 20, அக்டோபர் 2020 5:40:04 PM (IST)

பண்டிகை காலத்தை முன்னிட்டு தூத்துக்குடி - மைசூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: பயணிகளின் வசதிக்காக மைசூர் - தூத்துக்குடி - மைசூர் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. வண்டி எண் 06236 மைசூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில் மைசூரிலிருந்து மாலை 06.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் முற்பகல் 11.15 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். இந்த ரயில் 23.10.2020 முதல் 30.11.2020 வரை இயக்கப்படும். 

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06235 தூத்துக்குடி மைசூர் சிறப்பு ரயில் தூத்துக்குடியிலிருந்து மாலை 04.25 க்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.55 மணிக்கு மைசூர் சென்று சேரும். இந்த ரயில் 24.10.2020 முதல் 01.12.2020 வரை இயக்கப்படும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, இரண்டு குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 காப்பாளர் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். 

இந்த ரயில்கள் தெற்கு ரயில்வே எல்கைக்குள் வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், கரூர், புகலூர், கொடுமுடி, ஈரோடு, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான பயணசீட்டு முன்பதிவு 21.10.2020 அன்று காலை 08.00 மணிக்கு துவங்குகிறது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsAnbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory