» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதுரை-தூத்துக்குடி அகல இரயில் பாதைக்கு நிலஎடுப்பு பணி: அக்.22-ல் பொது விசாரணை - ஆட்சியர் தகவல்

செவ்வாய் 20, அக்டோபர் 2020 4:37:22 PM (IST)

மதுரை-தூத்துக்குடி இருவழி அகல இரயில்பாதை அமைக்கும் பணிக்கு ஓட்டப்பிடாரம் வட்டம் பாறைக்குட்டம் கிராமம், கயத்தார் வட்டம் கே.சிதம்பராபுரம் ஆகிய கிராமங்களில் நிலஎடுப்பு செய்வது தொடர்பாக பொது விசாரணை 22.10.2020 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு :  தூத்துக்குடி மாவட்டத்தில் மதுரை தூத்துக்குடி இருவழி அகல இரயில்பாதை அமைக்கும் பணிக்கு ஓட்டப்பிடாரம் வட்டம் பாறைக்குட்டம் கிராமம் கயத்தார் வட்டம், கே.சிதம்பராபுரம் ஆகிய கிராமங்களில் நிலஎடுப்பு செய்வது தொடர்பாக தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டம் 1997 பிரிவு 3(2)- ன் கீழான அறிவிப்பு நாளிதழில் பிரசுரம் செய்யப்பட்டு அதன் பேரிலான பொது விசாரணை ஓட்டப்பிடாரம் வட்டம் பாறைகுட்டம் கிராமத்திற்கு 15.04.2020 அன்று பிற்பகல் 5.00 மணிக்கும் கயத்தார் வட்டம் கே.சிதம்பராபுரம் கிராமத்திற்கு 29.04.2020 அன்று பிற்பகல் 4.30 மணிக்கும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உத்தரவிடப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் நோய் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டதாலும் நிர்வாக காரணங்களாலும் மேற்படி பொது விசாரணை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டம் 1997 பிரிவு 3(2)- ன் கீழான பொது விசாரணை 22.10.2020 அன்று பிற்பகல் 5.00 மணிக்கு ஓட்டப்பிடாரம் வட்டம் பாறைக்குட்டம் கிராமத்திற்கும் பிற்பகல் 5.30 மணிக்கு கயத்தார் வட்டம் கே.சிதம்பராபுரம் கிராமத்திற்கும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsBlack Forest CakesAnbu Communications

Thoothukudi Business Directory