» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மேள தாளத்துடன் கோவிலுக்குள் வர அனுமதியில்லை : குலசேகரபட்டினத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி

சனி 17, அக்டோபர் 2020 5:33:01 PM (IST)குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் பக்தர்கள் வேடம் அணிந்து மேளதாளங்களுடன் கோவில் பகுதிக்கு வருகை தர அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டிணம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா 17.10.2020 முதல் 28.10.2020 வரை 12 தினங்கள் நடைபெற உள்ளது. கோவிட் 19 தடை உத்தரவு அமலில் உள்ள காரணத்தினால் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  இன்று (17.10.2020) நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார்,உடனிருந்தார்.

திருக்கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு காப்பு கயிறு வழங்குமிடம். திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காத்திருக்கும் பகுதிகள் கோயில் வளாகத்தில் இ - பாஸ் பெற்று பக்தர்கள் வரும் வழி சாதாரணமாக பக்தர்கள் வரும் வழி, வெளி செல்லும் வழிகள், கடற்கரை பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அங்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் காவல்த்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது. குலசேகரபட்டிணம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டும் இன்று காலை கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தசரா திருவிழா இன்று தொடங்கி 28.10.2020 வரை 12 தினங்கள் நடைபெற உள்ளது. 10 ஆம் நாள் திருவிழா அன்று கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சத்துக்கு மேல் பக்தர்கள் கலந்துகொள்வார்கள். தினந்தோறும் இலட்சக்கனக்கான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்வார்கள். 

இந்த ஆண்டு கோவிட் 19 கரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு குறிப்பாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. முதல்வர் அவர்களால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் கோவில்கள், வழிபாட்டுக்கு திறக்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக கொடியேற்ற நிகழ்ச்சி, 26.10.2020 அன்று நடைபெறும் தசரா சூரசம்ஹார நிகழ்ச்சி, 27.10.2020 அன்று திருவிழா முடியும் நாள் ஆகிய நாட்களில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை 18.10.2020 முதல் 25.10.2020 வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 8000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 

இதில் ஆன்லைன் மூலம் 6000 பேர் பதிவு செய்தவர்களில் பாதி நபர்கள் இலவசமாகவும் பாதி நபர்கள் கட்டணத்துடன் கூடிய அனுமதியும் வழங்கப்படும். மேலும் நேரிடையாக வரும் 2000 நபர்கள் இலவச தரிசனத்திற்கு என்று வெவ்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன முதலில் வருவோர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல் துறை சார்பாக 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தற்காலிக கழிப்புட வசதி, பாதுகாப்பு வசதிகள், மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

இந்த முறை கடற்கரை பகுதியில் தங்குவது, கடைகள் அமைப்பது போன்ற எதற்கும் அனுமதி இல்லை. மேலும் கடற்கரை பகுதியில் எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக 26.10.2020 அன்று நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சி கோவில் பிரகாரத்திற்குள் நடத்தப்படும். கோவிலுக்கு வெளியில் எந்தவிதமான நிகழ்ச்சி நடத்த அனுமதியில்லை. தசரா திருவிழா தொடங்கியதை தொடர்ந்து செட்களை பதிவு செய்யதல் தொடர்பாக முன்னதாகவே பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது அதன்படி 1100 செட்டுகளை வரை தசரா திருவிழா கொண்டாடுவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் கோவில் நிர்வாகம் சார்;பாக இந்த பதிவு செய்யப்பட்டுள்ளது. 

செட்டுகளுக்கு காப்புகள் தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காப்புகள் வழங்க ஒவ்வொரு செட்டிலும் இரண்டு நபர்கள் மட்டும் வந்து பெற்று செல்ல ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது. பக்தர்கள் வேடம் அணிந்து மேளதாளங்களுடன் கோவில் பகுதிக்கு வருகை தர அனுமதி இல்லை. வேடமின்றி சாதரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். பக்தர்கள் தங்கள் ஊர்களிலேயே காப்பு அணிந்து வேடமிட்டு விரத்தை முடித்துக்கொள்ள வேண்டும். தினசரி நடைபெறும் பூஜைகளில் உபயதாரர்கள்/மண்டகபடிதாரர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும். பூஜை முழுவதையும் உட்கார்ந்து பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை.

வெளியூர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது. வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திருவிழாவை காண வருவகை தருவதை தவிர்க்க வேண்டும். திருவிழாவிற்கு வருவோர்கள் குலசேகரபட்டணத்தில் தங்குவதற்கு அனுமதி இல்லை. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தற்காலிக கழிப்புட வசதி, பாதுகாப்பு வசதிகள், மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ் வசதிகள் வழக்கம்போல் ஏற்பாடு செய்யப்படும்.

திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். திருவிழா தொடர்பான 12 நாள் நிகழ்ச்சிகளும் பக்தர்களின் வசதிக்காக யூடியுப் சேனல் மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்திட கோவில் நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிட் 19 கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், பக்தர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) பிருத்திவிராஜ்,இ.ஆ.ப,  திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனப்பிரியா, உதவி காவல் கண்காணிப்பாளர் ஹரிஸ் சிங்,இ.கா.ப., இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, திருக்கோவில் செயல் அலுவலர் ரத்தினவேல் பாண்டியன், தர்க்கார் ரோஜலி சுமதா, திருச்செந்தூர் வட்டாட்சியர் முருகேசன், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராணி மற்றும் திருக்கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

kumarOct 19, 2020 - 01:38:41 PM | Posted IP 162.1*****

viratham irunthu, vedam aninthu varubavargalai koviluku anumathikkavendum enbathu enathu thalmayanad vendugol....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory