» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தந்தை, மகன் கொலை வழக்கு: காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு இடைக்கால ஜாமீன்

சனி 17, அக்டோபர் 2020 5:11:11 PM (IST)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.இந்த விவகாரம் தொடர்பாக காவலர் பால்ராஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் காவலர் பால்ராஜ் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
 
இந்நிலையில் கைதானவர்களில் ஒருவரான காவலர் தாமஸ் பிரான்சிஸ்-க்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இடைக்கால ஜாமீனில் வெளியே செல்லும் தாமஸுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsAnbu Communications

Black Forest Cakes


Thoothukudi Business Directory