» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மேம்பாலம் தடுப்பு சுவரில் பைக் மோதி வாலிபர் பலி: தாய், மகன் படுகாயம்

சனி 17, அக்டோபர் 2020 4:12:30 PM (IST)

கோவில்பட்டியில் மேம்பாலம் தடுப்பு சுவரில் பைக் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார். அவரது உறவினர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீர வாஞ்சிநகரை சேர்ந்தவர் முத்துப் பாண்டி மகன் கார்த்திக்(28) எலக்ட்ரீசியன். இந்நிலையில் கார்த்திக், அவரது உறவினர் இசக்கிமுத்து மனைவி சுதாலட்சுமி, அவரது மகன் சுந்தரபாண்டி (10) ஆகிய 3 பேரும் கோவில்பட்டி அருகேயுள்ள கோனார் கோட்டையில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு. கோவில்பட்டிக்கு ஒரே பைக்கில் திரும்பி கொண்டிருந்தனர். 

கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலத்தில் சென்றபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் பைக் மோதியது. இதில் கார்த்திக் உள்பட 3 பேரும் படுகாயம் அடைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதில் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சுதாலட்சுமி, அவரது மகன் சுந்தரபாண்டி ஆகியோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பைக் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes



Anbu Communications





Thoothukudi Business Directory