» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அதிமுக 49வது ஆண்டு துவக்க விழா : எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவிப்பு

சனி 17, அக்டோபர் 2020 12:12:36 PM (IST)தூத்துக்குடியில் அதிமுக 49வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அதிமுகவினர் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

தூத்துக்குடி டூவிபுரம் 7வது தெருவில் தெற்கு மாவட்ட கழக அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவப் படங்களுக்கு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்விற்கு மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட இணைச்செயலாளர் செரினா சி.த பாக்கியராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் சந்தனம், வசந்தாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட மதிய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவருமான இரா.சுதாகர், மாநில அமைப்பு சாரா ஒட்டுனரணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் ராஜசேகர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வக்கீல் வீரபாகு, மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் வி.பி.செல்வகுமார் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் தட்டார்மடம் ஞானபிரகாசம், மாவட்ட மகளிரணி செயலாளர் குருத்தாய், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் யூ.எஸ். சேகர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக்.ராஜா, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே. பிரபாகர், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்புதூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை தலைமையில், அதிமுக பகுதி செயலாளர்கள் பி.சேவியர், முருகன் முன்னிலையில் பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு. பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதுபோல் தூத்துக்குடி சிதம்பர நகர் 4வது தெருவில் உள்ள அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சித செல்லபாண்டியன் அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.பின்னர் கழக மூத்த முன்னோடிகள் 60 நபர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

விழாவில் அமலி ராஜன், ஜெபமாலை, நட்சத்திர பேச்சாளர் எஸ் டி கருணாநிதி, தளபதி கே பிச்சையா ஜோதிமணி, பிடிஆர் ராஜகோபால், எஸ் கே மாரியப்பன், ஸ்ரீ வைகுண்டம் ஆறுமுக நயினார், கேகே அரச குரு, மாதவ சிங், ஜெய கண்ணன், ராஜா மகாதேவன், செல்லதுரை, ஜோசப் ஞாயம் ரொமால்ட் ராஜா நேரு, எம் பெருமாள், துரைப்பாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அன்ட்ரூ மணி, பிள்ளை விநாயகம், எம் ராஜாராம், தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் டேனிஷ் பிரபு, வழக்கறிஞர் பிரிவு சிவா, அம்மா பேரவை பி மூர்த்தி, தருவை எம் எஸ். மாடசாமி ஏ ராமகிருஷ்ணன், ராம் கோபால் மில்லைL ராஜா, லிங்ககுமார், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம், மேலூர் கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் எம் சங்கரேஸ்வரி, என். சிவசுப்பிரமணியன், அன்புலிங்கம், பாலசுப்ரமணியன், திருமணி அம்மாள், சங்கரி பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory