» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிரிக்கெட் மட்டையால் தந்தை, மகளை தாக்கியவர் கைது

சனி 17, அக்டோபர் 2020 11:27:45 AM (IST)

ஆா்வார்திருநகரி அருகே மதுபோதையில் தனது மகள் மற்றும் 90 வயது தந்தையை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஆா்வார்திருநகரி அருகேயுள்ள மாவடி பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (57), இவரது மனைவி புனிதா (43), இந்த தம்பதியரின் மகள் பிரித்தி ஏஞ்சலின் (21). இந்நிலையில், மோகன் தினமும் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வாரம். இதனை தட்டிக் கேட்டதால் நேற்று அவர் தனது மகளை கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளார். 

அப்போது இதனை தடுக்க முயன்ற மோகனின் தந்தை சத்யானந்தம் (90), என்பவரையும் அவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர்கள் இருவரும் ஸ்ரீவைகுண்டம் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் ஆழ்வார்திருநகரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துவீரப்பன் வழக்குப் பதிந்து, மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest CakesAnbu Communications


Thoothukudi Business Directory