» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சனி 17, அக்டோபர் 2020 11:06:58 AM (IST)குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் பிரசித்த பெற்ற தசரா திருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 10.45 மணிக்கு கொடிப்பட்டம் புறப்பட்டு கோவிலைச் சுற்றி வலம் வந்தது. தொடர்ந்து கோவில் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.  தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. 

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, இன்று பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதுபோல் 10, 11-ம் திருவிழா நாட்களில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்க்பபட்டுள்ளது. 2-ம் திருவிழா முதல் 9-ம் நாள் வரையிலும், விழா நிறைவு நாளிலும் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அரசின் வழிகாட்டுதல்படி தினமும் 8 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, கோவிலைச் சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். 

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் நாளான வருகிற 26-ம் தேதி (திங்கட்கிழமை) இரவில் நடக்கிறது. கோவிலில் பக்தர்கள் வரிசையாக செல்லவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் கோவில் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. கோவில் வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கவும், கைகழுவும் திரவம் மூலம் கைகளை சுத்தமாக கழுவிய பின்னரே அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் (பொறுப்பு) ரத்தினவேல் பாண்டியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications


Black Forest Cakes


Thoothukudi Business Directory