» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி அருகே 3 இடங்களில் அம்மா ரேஷன் கடைகள் : அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்

சனி 17, அக்டோபர் 2020 8:30:15 AM (IST)கோவில்பட்டி அருகே 3 இடங்களில் ‘அம்மா’ நகரும் ரேஷன் கடைகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி அருகே பரசுராமபுரம், கார்த்திகைபட்டி, குமாரபுரம் ஆகிய பகுதிகளில் ‘அம்மா’ நகரும் ரேஷன் கடைகள் தொடக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். சின்னப்பன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ‘அம்மா’ நகரும் ரேஷன் கடைகளை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.

விழாவில் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, கோவில்பட்டி யூனியன் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், யூனியன் துணை தலைவர் பழனிசாமி, பஞ்சாயத்து தலைவர் விஜயகுமார், கிளை செயலாளர் பொன்னுசாமி தங்கபாண்டியன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் கணேஷ் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், வினோபாஜி, கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications
Black Forest Cakes

Thoothukudi Business Directory