» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜெயலலிதா இறப்புக்கு பிறகு நடந்த சதி: முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் பேட்டி!!

வெள்ளி 16, அக்டோபர் 2020 5:35:07 PM (IST)

தலைமைச் செயலகத்தில் நடந்த வருமானவரித்துறை சோதனையில் சதி இருப்பதாக முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் கூறினார்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் 221வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் "தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவம் தவறான நடவடிக்கை. 

யார் செய்தார்கள் என்று எனக்கு தெரியாது. தேவையில்லாமல் என் மீது ஒரு பெரிய பழியை ஏற்படுத்தி இருக்கிறார்கள். யார் செய்தார்கள் என்றாலும்  எனக்கு கவலை இல்லை. நான் சுத்தமானவன். அம்மாவின் இறப்புக்கு பிறகு ஏதோ நடந்திருக்கிறது. என்ன நடந்தது யார் என்ன நினைத்தார்கள் என்று தெரியவில்லை. நான் யாரையும் பழி சுமத்த விரும்பவில்லை. ஆனால் அதில் ஒரு சதி நடந்திருக்கிறது. இப்போது சொல்ல முடியாது. நேரம் வரும்போது நான் சொல்வேன் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory