» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது!

வெள்ளி 16, அக்டோபர் 2020 12:55:38 PM (IST)

கழுகுமலை பகுதியில் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை பகுதியைச் சேர்ந்த 6 சிறுமிகளிடம் துலுக்கர்பட்டி, தெற்கு தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் ஏசுராஜ்(48) என்பவர் கடந்த 06.10.2020 அன்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் தாய் அளித்த புகாரின் பேரில் கழுகுமலை காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஏசுராஜை கைது செய்தனர். 

இந்நிலையில், ஏசுராஜை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் ஏசுராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் கஸ்தூரி, ஏசுராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsBlack Forest Cakes


Anbu Communications

Thoothukudi Business Directory