» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் அர்ச்சகர் உட்பட 3பேருக்கு கரோனா தொற்று உறுதி!!

வெள்ளி 16, அக்டோபர் 2020 11:25:02 AM (IST)

குலசை முத்தாரம்மன் கோயிலில் நாளை தசரா நாளை தொடங்க உள்ள நிலையில், அர்ச்சகர் உட்பட 3பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கரோனா பாதிப்பு குறையாத நிலையில், பக்தர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே தசரா திருவிழாவுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தினசரி ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ள 8ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை தசரா தொடங்க உள்ளதால் கோயில் ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதில் கோயில் அர்ச்சகர், உதவி அர்ச்சகர் மற்றும் டைப்பிஸ்ட் ஆகிய மூவருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மூவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, பின்னர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் அனுதிக்கப்பட்டனர். கோயி்ல் ஊழியர்கள் 3பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கோயில் முழுவதும் கிருமினாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. குலசை முத்தாரம்மன் கோயிலில் நாளை தசரா நாளை தொடங்க உள்ள நிலையில், அர்ச்சகர் உட்பட 3பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads





Anbu Communications

Black Forest Cakes




Thoothukudi Business Directory