» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நடிகை குஷ்பு மீது காவல் நிலையத்தில் புகார்

வெள்ளி 16, அக்டோபர் 2020 10:30:20 AM (IST)

மனவளர்ச்சி குன்றியோரை அவமானப்படுத்தியதாக நடிகை குஷ்பு மீது கோவில்பட்டி, கழுகுமலை காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மனவளர்ச்சி குன்றியோரை அவமானப்படுத்தியதாக நடிகை குஷ்பு மீது தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என விமர்சித்தார். இந்த கருத்து மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும், சிறுமைப்படுத்தும் விதத்திலான கருத்து என்று எதிர்ப்பு கிளம்பியது. 

ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 பிரிவு 92 (a) படி மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் வகையில் அவர் பேசியதற்கு வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட துணைச் செயலர் சக்கரையப்பன் தலைமையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் முன் நேற்று திரண்டு புகார் மனுவை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளரிடம் வழங்கினர்.அப்போது மாவட்டச் செயலர் முருகன், காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் சண்முகராஜ், மாவட்ட பொதுச்செயலர் முத்து, சேவா தளத்தைச் சேர்ந்த சக்திவிநாயகம், மாற்றுத்திறனாளிகள் குருநாதன், மைதீன், அந்தோணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுபோல, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கழுகுமலை காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது


மக்கள் கருத்து

K.ganeshanOct 16, 2020 - 08:46:04 PM | Posted IP 108.1*****

Already madam Kushboo expressed regret if it hurts others.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest CakesAnbu Communications

Thoothukudi Business Directory