» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தொழிலதிபரிடம் ரூ.21¾ லட்சம் மோசடி : 3பேர் மீது வழக்குப் பதிவு

வெள்ளி 16, அக்டோபர் 2020 8:30:39 AM (IST)

தூத்துக்குடியில் போலி ஆவணங்கள் தயாரித்து தொழிலதிபரிடம் ரூ.21¾ லட்சம் மோசடி செய்ததாக 3பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி புதுக்கோட்டையை சேர்ந்தவர் சாலமோன்ராஜா. இவர் தூத்துக்குடியில்  மீன்கள் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய தந்தையிடம், சிவகளையை சேர்ந்த கணேசன், சிறுத்தொண்டநல்லூரை சேர்ந்த பெருமாள், ஏரலை சேர்ந்த பெருமாள்ராஜா ஆகியோர் அணியாபரநல்லூரில் உள்ள ஒரு இடத்தை போலி ஆவணம் மூலம் ரூ.21 லட்சத்து 90 ஆயிரத்துக்கு பதிவு செய்து கொடுத்து உள்ளனர். பின்னர் போலி ஆவணம் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்ததால், பணத்தை திருப்பி கேட்டு உள்ளனர். 

அதற்கு கணேசன் ரூ.9 லட்சம் மற்றும் ரூ.3 லட்சத்துக்கான காசோலையை கொடுத்தார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது, பணம் இன்றி திரும்பியது. இதுகுறித்து சாலமோன்ராஜா கேட்டு உள்ளார். அப்போது கணேசன், பெருமாள், பெருமாள்ராஜா ஆகியோர் மிரட்டல் விடுத்து, பணத்தை மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாலமோன்ராஜா தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரிடம் புகார் மனு கொடுத்தார். அதன்பேரில் கணேசன், பெருமாள், பெருமாள்ராஜா ஆகியோர் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications
Black Forest Cakes
Thoothukudi Business Directory