» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இன்னும் ஒருமாத காலத்தில் தூத்துக்குடி நகரமே சிசிடிவி கண்காணிப்பில் இருக்கும் : மாவட்ட எஸ்.பி பேட்டி

புதன் 30, செப்டம்பர் 2020 1:41:47 PM (IST)இன்னும் ஒருமாத காலத்தில் தூத்துக்குடி நகரமே சிசிடிவி கண்காணிப்பில் இருக்கும் என புதிதாக அமைக்கப்பட்ட சி.சி.டி.வி கேமராவை இயக்கி வைத்து மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் புதிதாக  16 சி.சி.டி.வி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிசிடிவி கேமராக்களை, தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் மின்திரை மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டு புதிய சிசிடிவி கேமராக்களை இயக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும், குற்றம் நடவாமல் இருப்பதற்கும் சி.சி.டி.வி கேமரா என்பது பெரிதும் உதவியாக உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் போன்ற நகர்புறங்களில் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தற்போது 5500 சிசிடிவி கேமராக்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் பெரும்பாலான இடங்களில் கேமரா பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒருமாத காலத்தில் தூத்துக்குடி நகரமே சிசிடிவி கண்காணிப்பில் இருக்கும் என்று கூறினார்.
           
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் கணேஷ், மத்திய பாகம்  காவல் ஆய்வாளர்  ஜெயப்பிரகாஷ், காவல்துறை போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், மத்திய பாகம் காவல்நிலைய  உதவி ஆய்வாளர் ராஜாமணி உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.  


மக்கள் கருத்து

ஒருவன்Oct 1, 2020 - 08:22:37 AM | Posted IP 108.1*****

சூப்பர்

M.sundaramSep 30, 2020 - 03:41:23 PM | Posted IP 108.1*****

Very good initiative. Police on duty must observe minutely and detect the wrong doing immediately without waiting for written statement.

RajaSep 30, 2020 - 03:39:39 PM | Posted IP 173.2*****

Good effort. It is pride of Thoothukudi people.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory