» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்க அனுமதி! பக்தர்கள், வியாபாரிகள் கோரிக்கை!!

புதன் 30, செப்டம்பர் 2020 12:51:11 PM (IST)

தென் தமிழக மக்களின் முக்கியத் தேவையாக விளங்கும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை உடனடியாக இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலானது திருச்செந்தூரிலிருந்து 06.50 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர் வழியே சென்று சென்னையை மறுநாள் காலை 11.25 மணிக்கு அடைகின்றது. மறுமார்க்கத்தில் சென்னையிலிருந்து 04.05 மணிக்குப் புறப்பட்டு திருச்செந்தூரினை மறுநாள் காலை 08.25 மணிக்கு அடைகின்றது. இந்த ரயில் பக்தர்கள் மற்றும் அப்பகுதி வியாபாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கள் ஒட்டுமொத்தமாக ரயில்சேவைகள் நிறுத்தப்பட்டது. 

ஊரடங்கு தளர்வு காரணமாக பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது திருநெல்வேலி- சென்னை எழும்பூர், செங்கோட்டை- சென்னை எழும்பூர் உட்பட மேலும் 7 தமிழக ரயில்களுக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த ரயில்களுடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்காதது அப்பகுதி மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. 

எனவே வியாபாரிகள் மற்றும் பக்தர்களின் தேவையை கருத்தில் கொண்டு உடனடியாக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை வேண்டும் என பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes




Anbu Communications




Thoothukudi Business Directory