» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா சிறப்பூதியம் வழங்க கோரிக்கை : ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்!!

புதன் 30, செப்டம்பர் 2020 12:27:25 PM (IST)தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாநகராட்சி ஒப்பந்த சுய உதவிக்குழு தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.624, ஒட்டுநர்களுக்கு ரூ.622 தினக்கூலி வழங்கிடக் கோரியும்,  தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊழியம், கரோனா இன்சூரன்ஸ், கரோனா பாதித்த தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.2லட்சம் நிதியுதவி, பணி நேரத்தை முறைப்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் (சிஐடியூ) சார்பில் தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தூத்துக்குடி மாநகர கிளை தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். சிஐடியூ மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட பொதுச் செயலாளர் முனியசாமி, உப்பு தொழிலாளர் சங்கத் தலைவர் பொன்ராஜ், சி.டபிள்யூ.எப்.ஐ., மாரியப்பன், மாவட்ட பொருளாளர் செல்வராஜ், பூபாலன், உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsBlack Forest CakesAnbu Communications
Thoothukudi Business Directory