» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துத்துக்குடியில் இளம்பெண் மாயம்: போலீஸ் விசாரணை!!

புதன் 30, செப்டம்பர் 2020 12:09:05 PM (IST)

துத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த இளம்பெண் ஒருவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை, கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பச்சைமால். இவரது மகள் கீதா (25), தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். கடந்த 28ம் தேதி வேலைக்குச் செல்வதாக கூறிச் சென்றுள்ளார். அதன் பின்னர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலையத்தில் பச்சைமால் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னாட் சேவியர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications


Black Forest Cakes


Thoothukudi Business Directory