» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள் திருட்டு: மர்ம நபர்களுக்குபோலீஸ் வலைவீச்சு

புதன் 30, செப்டம்பர் 2020 12:00:39 PM (IST)

குரும்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகேயுள்ள வீரமாணிக்க கிராமம், கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மனைவி பேச்சியம்மாள் (50), கணவர் இறந்து விட்டார். பேச்சியம்மாள் மட்டும் தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு அவர், கோரம்பள்ளத்தில உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் 28ம் தேதி மாலை வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். 

அப்போது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 12 பவுன் தங்க நகைகள் திருடுபோயிருந்தது. இதுகுறித்து குரும்பூர் காவல் நிலையத்தில் பேச்சியம்மாள் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தாமஸ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Black Forest Cakes

Anbu Communications





Thoothukudi Business Directory