» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சேகர தலைவரை தாக்கிய முன்னாள் ஊழியர் கைது

புதன் 30, செப்டம்பர் 2020 11:02:19 AM (IST)

நாசரேத்தில் பணி நீக்கம் செய்ததால் சேகர தலைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். 

நாசரேத் சேகரத் தலைவராக இருப்பவர் ஆண்ட்ரூ விக்டர் ஞானஒளி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாசரேத் சேகர அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்த கனகராஜ் தெருவை சேர்ந்த கிறிஸ்டோபர் மகன் அகஸ்டின் பால்ராஜ் (43) என்பவரை பணியில் இருந்து நீக்கம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை நாசரேத் பேராலய வளாகத்தில் உள்ள சேகர அலுவலகத்திற்கு சேகர தலைவர் விக்டர் ஞானஒளி வந்துள்ளார்.

அப்போது அங்கு அத்துமீறி நுழைந்த அகஸ்டின் பால்ராஜ் சேகர் தலைவரை ஆபாசமாக பேசி தாக்கி காயப்படுத்தியுள்ளார். மேலும் தன்னை வேலைக்கு சேர்க்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் காயம் அடைந்த ஆண்ட்ரு விக்டர் ஞானஒளி நாசரேத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து அகஸ்டின் பால்ராஜை கைது செய்தார். பின்னர் அவர் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads



Anbu Communications


Black Forest Cakes





Thoothukudi Business Directory