» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசை தசரா விரதம் இருக்கும் பக்தர்கள் உள்ளூரில் விரதத்தை முடிக்க ஆட்சியர் வேண்டுகோள்

வெள்ளி 25, செப்டம்பர் 2020 8:35:13 PM (IST)குலசை தசரா திருவிழாவிற்காக விரதம் இருக்கும் பக்தர்கள் தங்கள் பகுதியில் உள்ள உள்ளுர் கோவில்களில் விரதத்தை முடித்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குலசேகரபட்டிணத்தில் அருள்தரும் முத்தாரம்மன் கோவில் 2020ம் ஆண்டு தசரா திருவிழா தொடர்பான முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (25.09.2020) நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹாரத்திற்கு அடுத்ததாக நடைபெறும் பெரிய திருவிழா குலசேகரபட்டிணத்தில் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா ஆகும். இந்த ஆண்டு தசரா திருவிழா கொடியேற்றம் 17.10.2020 அன்று தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளதால் 17.10.2020 அன்று திருவிழா கொடியேற்றத்தின் போது பக்தர்கள் கலந்துகொள்ள இயலாது. 

மேலும் 01, 10, 11 ஆகிய மூன்று நாள் திருவிழாக்கள் தவிர மற்ற நாட்களில் காலை 7 மணிமுதல் இரவு 8 மணிவரை எவ்வளவு பக்தர்கள் தரிசனம் செய்ய இயலும் என்பதற்கேற்ப திருச்செந்தூர் கோவிலுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்து பக்தர்கள் வருவதைப் போல இங்கும் அனுமதிக்கலாம். சுவாமி புறப்பாடு வெளியில் செய்யாமல் உட்பிரகாரங்களில் மட்டும் நடைபெறவும் உற்சவ மூர்த்தி வீதி உலா கோவில் உட்பிரகாரத்தில் மட்டும் நடைபெறவும் இதில் பக்தர்கள் அனுமதி இல்லாமல் நடத்தலாம். 

திருவிழா நிகழ்வுகளை யூ டியுப் மற்றும் லோக்கல் சானல்கள் மூலம் பக்தர்கள் காணும் வகையில் ஒளிபரப்பலாம். இந்த ஆண்டு திருக்கோவில் மூலம் பக்தர்களுக்கு காப்புக்கள் எதுவும் கட்டப்படமாட்டாது. கொரோனா தொற்றினை கருத்தில் கொண்டு விரதம் இருக்கும் பக்தர்கள் தங்கள் பகுதியில் உள்ள உள்ளுர் கோவில்களில் விரதத்தை முடித்துக்கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

கட்டளைதாரர்கள் வாங்கிக்கொடுக்கும் அபிசேக பொருட்கள் பெற்று சுவாமி அபிசேகம் செய்யப்படும். ஆனால் அபிசேகத்தை அமர்ந்து பார்க்க அனுமதி இல்லை. தீயணைப்பு துறையினர் மூலம் தேவையான மீட்பு நடவடிக்கைகளையும், காவல் துறையின் மூலம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். 

கோவில் நிர்வாகத்தின் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்யவும், தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும். பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 30ம் தேதிக்கு பின் தமிழக அரசு அறிவிக்கும் தளர்வுகளை பொறுத்து பொதுமக்களுக்கு இதுகுறித்து செய்திகள் நாளிதழ்கள் மூலம் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் உதவி ஆட்சியர்(பயிற்சி) பிரித்திவிராஜ், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்ரியா, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன், திருச்செந்தூர் வட்டாட்சியர் ஞானராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர்மன்னன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

kumarSep 26, 2020 - 11:11:29 AM | Posted IP 162.1*****

iyarkai kiruminasini manjal konduthane kappu kattapadum...atharku en thadai??

Vj ajithSep 25, 2020 - 10:15:58 PM | Posted IP 162.1*****

வேண்டும் வேண்டும் திருவிழா வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory