» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 13 இடங்களில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்

வெள்ளி 25, செப்டம்பர் 2020 8:16:15 PM (IST)

வேளாண் திருத்த மசோதாவை வாபஸ் பெறக்கோரி, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தூத்துக்கு வடக்கு மாவட்ட தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சார்பில் வரும் 28ஆம் தேதி 13 இடங்களில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது  விவசாயிகளையும், சிறுவணிகர்களையும் பாதாளத்தில் தள்ளும் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தசட்டத்தால், விவசாயத்தில் ஆன்லைன் வர்த்தகத்தைத் திணிக்கிறது, நெல்லுக்கான குறைந்தபட்ச விலைக்கு உத்தரவாதம் கிடையாது, அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படும் அபாயம், வேளாண் விற்பனை ஒழுங்குமுறைக் கூடங்கள் மூடப்படும், உழவர் சந்தைகள் காணாமல் போகும், சில்லறை வணிகம் - வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள், பொது விநியோகத் திட்டத்துக்கு அச்சுறுத்தல், ரேசன் கடைகள் என்ன ஆகுமோ?

இந்த சட்டம் விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்களுக்கு விரோதமானது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமானது, பதுக்கலுக்கு பாதைவகுக்கும், மாநில உரிமைகளுக்கு எதிரானது, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது, இந்த காரணத்துக்காகவே எதிர்க்க வேண்டும். இந்தசட்டத்தை கொண்டு வந்ததினால் "ஏழைமகன்” என்றுசொல்லிக் கொண்டு ஏழைகளை அழிக்கிறார் மோடி! "நானும் விவசாயி”என்று சொல்லிக் கொண்டு விவசாயத்தை அழிக்கிறார் எடப்பாடி! 

விவசாய நாடான இந்தியாவை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சார்பாக வரும் 28ஆம் தேதி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் 13 இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருக்கிறது.

கோவில்பட்டி மேற்கு ஒன்றியம், இனாம் மணியாச்சி ஊராட்சி பேரூந்து நிலையம் எதிரே நடைபெறும் ஆர்பாட்டம்,. கனிமொழி கருணாநிதி எம்.பி., தலைமையிலும், மாவட்டபொறுப்பாளாராகிய கீதாஜீவன் எம்.எல்.ஏ,, மா.கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்சுணன் ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ரமேஷ் மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெறுகிறது.

அதேபோல தூத்துக்குடி மாநகரம் சிதம்பரநகர் பேரூந்து நிறுத்தம் எதிரில் காங்கிரஸ் காரிய கமிட்டி துணை தலைவர் ஏபிசிவி சண்முகம் தலைமையில், மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி காங்கிரஸ் மாநகர மாவட்டத் தலைவர் முரளிதரன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டசெயலாளர் அகமது இக்பால், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அசன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெறுகிறது.

கயத்தாறு மெயின் பஜாரில் நடைபெறும் ஆர்ப்பாட்டமானது இ.கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டசெயலாளர் அழகுமுத்துப் பாண்டியன் தலைமையில் ஒன்றிய கழக செயலாளர் சின்னப்பாண்டியன், பேரூர் கழகச் செயலாளர் சுரேஷ் கண்ணன் முன்னிலையிலும், கோவில்பட்டி பேரூந்து நிலையம் எதிரில் நகரச் செயலாளர் கருணாநிதி தலைமையில் நடைபெறுகிறது.

கயத்தாறு மேற்கு ஒன்றியம் மற்றும் கழுகுமலை பேரூர்க் கழகம் சார்பாக கழுகுமலை காந்தி மைதானத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் மாநிலவிவசாய தொழிலாளரணி செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் ஒன்றிய கழக செயலாளர் கருப்பசாமி, பேரூர் கழக செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலையிலும் நடைபெறுகிறது.

கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் சார்பாக கீழஈராலில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் ஒன்றிய கழக செயலாளர் நவநீத கண்ணன் தலைமையிலும், எட்டயபுரத்தில் காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் பேரூர் கழக செயலாளர் பாரதிகணேசன் முன்னிலையிலும், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் சார்பாக சூரங்குடியில் ஒன்றியகழக செயலாளர் சின்ன மாரிமுத்து தலைமையிலும் நடைபெறுகிறது.

ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம் சாhர்பாக குறுக்குசாலை மெயின் பஜாரில் ஒன்றிய கழக செயலாளர் காசி விஸ்வநாதன் தலைமையிலும், விளாத்திகுளம் மேற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் சார்பாக விளாத்திகுளம் பழைய தாலுகா அலுவலகம் முன்பு ஒன்றிய கழகசெயலாளர் ஜெயக்குமார் தலைமையில் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி முன்னிலையிலும் புதூர் மேற்கு ஒன்றியம் சார்பில் நாகலாபுரத்தில் ஒன்றிய கழகச் செயலாளர் மும்மூர்த்தி தலைமையிலும் நடைபெறுகிறது. 

புதூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் புதூர் பேரூர் கழகம் சார்பில் புதூர் பேரூந்து நிலையம் எதிரில் ஒன்றிய கழகச் செயலாளர் செல்வராஜ் தலைமையில், பேரூர் கழகச் செயலாளர் மருதுபாண்டி முன்னிலையிலும், கடம்பூர் மெயின் பஜாரில் பேரூர் கழக செயலாளர் ராகவன் தலைமையிலும், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெறுகிறது.

விவசாயிகள், சிறுவணிகர்களை பாதிக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க கூட்டணிக் கட்சிகள் நடத்தும் இந்த மாபெரும் ஆர்பாட்டத்திற்கு கழக தோழர்கள், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், சிறுவணிகர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு கீதாஜீவன் எம்.எல்.ஏ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Black Forest Cakes

Anbu Communications

Thoothukudi Business Directory