» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புதுக்கோட்டையில் எல்லோரும் நம்முடன் திட்டத்தில் திமுகவில் இணையும் நிகழ்ச்சி

வெள்ளி 25, செப்டம்பர் 2020 7:10:48 PM (IST)தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் புதுக்கோட்டையில் எல்லோரும் நம்முடன் என்ற திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் எல்லோரும் நம்முடன் என்ற திட்டத்தின்படி இன்று குமாரகிரி ஊராட்சி புதுக்கோட்டையில் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வெயில் ராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துக்குமார், ஆஸ்கார் நர்மதா, ரூபன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சண்முக நாராயணன், துணை அமைப்பாளர் மகாலிங்க ராஜா, புதுக்கோட்டை கூட்டுறவு வங்கி துணை தலைவர் ராஜ்குமார், ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் வரலட்சுமி, குமாரகிரி ஊராட்சி செயலாளர்கள் பொன் செல்வன், செல்வின், இசைக்கி சைமன், அவைத் தலைவர் பாலசுந்தரம், கூட்டாம்புளி பால்ராஜ், சேர்வைகரன்மடம் பால்ராஜ், ராஜா ஸ்டாலின், தகவல் தொழில் நுட்ப அணி விக்னேஷ் மற்றும் கழக முன்னணியினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory