» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெரு மூடல் : வாகன ஓட்டிகள் ஏமாற்றம்

வெள்ளி 25, செப்டம்பர் 2020 6:10:02 PM (IST)தூத்துக்குடியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக பாலவிநாயகர் கோவில் மூடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளி சந்திப்பிலிருந்து காய்கறி மார்க்கெட் எதிரே உள்ள பம்பிங் ஸ்டேஷனுக்கு 45 அடி தூரத்திற்கு பாதாள சாக்கடை திட்ட குழாய் பதிக்கும் வேலைகள் நடைபெறுவதால் பாலவிநாயகர் கோவில் தெரு இன்றிலிருந்து மூடப்பட்டுள்ளது. குரூஸ்பர்னாந்து சிலையிலிருந்து மேற்காக காய்கறி மார்க்கெட் சந்திப்பு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று கொண்டிருக்கின்றனர். 

இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, தூத்துக்குடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது. 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. ஏற்கனவே இந்த பணியை செய்த ஒப்பந்தக்காரர்கள் மிக ஆழமான கடினமான பணி என்பதால் கைவிட்டு சென்றுவிட்டனர். தற்போது புதிய ஒப்பந்தகாரர்கள் மூலம் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 

சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளி சந்திப்பிலிருந்து காய்கறி மார்க்கெட் எதிரே உள்ள பம்பிங் ஸ்டேஷனுக்கு 45 அடி தூரத்திற்கு பாதாள சாக்கடை திட்ட குழாய் பதிக்கும் பணி இன்னும் 15 நாட்களில் முடிவடையும் என தெரிவித்தார். 


மக்கள் கருத்து

ஆசீர். விSep 26, 2020 - 10:03:08 AM | Posted IP 108.1*****

இப்படி ஊருக்குள்ள இருக்குற முக்கியமான சாலைகளை எல்லாம் ஒரே நேரத்தில் அடைத்து வைத்து கொண்டால் மக்கள் என்னதான் செய்வது? ஜார்ஜ் ரோடு முதல் மாதா கோவில் வரை காரணமே இல்லாமல் ரோட்டை புல்டோசர் மூலர் நொறுக்கி விட்டார்கள். வி இ ரோட்டை அடைத்து வைத்து காங்கிறீட் ரோடு போட்டு விளையாடி கொண்டு இருக்கிறார்கள். தென்பாகம் காவல் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் லாரி லாரி யாக மண் குவித்து விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். அண்ணா நகர் பிரதான சாலையில் காங்கிறீட் ரோடு போட்டு விளையாடி கொண்டு இருக்கிறார்கள்.அப்படி ஊருக்குள் எத்தனை மாற்று வழிதான் இருக்கிறது? மாவட்ட நிர்வாகத்துக்கு தூத்துக்குடியின் சாலைகளை பற்றி தெரியுமா இல்லையா? ஒவ்வொரு வேலையாக பார்த்தால் என்னகுறையப்போகிறது ? ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் வந்துள்ள தொகை முழுவதையும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் செல்வழிக்கவேண்டும் என்ற ஒரே காரணம் தானா? ஆட்சியர் அவர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கும் ஒரே அறிவுரை தான். இன்னைக்கு உங்களுக்கு வாய் மொழி உத்தரவு போடும் அரசியல்வாதி நாளைக்கு காணாமல் போய்விடுவான். நீங்கள் 60 வயது வரை பணியாற்றவேண்டும் மறந்துவிடக்கூடாது. மக்களுக்காக நான் என்ற தாரக மந்திரத்தோடு பணிபுரியுங்கள்

ஆனால் உண்மைSep 25, 2020 - 09:29:03 PM | Posted IP 162.1*****

இனி எதிர்காலத்தில் குடிநீர் எல்லாம் சாக்கடை கலந்து தான் வரும் ... ஊர் பூரா ஆங்காங்கே சாக்கடை .. மாநகராட்சியின் எப்போ பார்த்தாலும் சாக்கடை மட்டும் தான் வேலை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory