» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை : ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

வெள்ளி 25, செப்டம்பர் 2020 5:49:04 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித் தொகைக்காக இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய முப்படைவீரர் வாரியம் புதுதில்லி வாயிலாக முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அமைச்சரின் விருப்புரிமை நிதியிலிருந்து (RMEWF) வழங்கப்படும் கல்வி உதவித்தொகை மற்றும் ஏனைய நிதியுதவிகள் அனைத்தும் பெற,முன்னாள் படைவீரர்கள் / விதவையர்கள் தங்களது பெயரினை www.ksb.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்த பின்னர், தங்களது தகுதிக்கு ஏற்றார்போல நிதியுதவி பெற்றிட ‘நலதிட்டங்கள்’ என்ற தலைப்பில் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துப் பயன் பெறலாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 1-ம் வகுப்புமுதல் 12ம் வகுப்பு வரை மற்றும் பட்டப் படிப்பு பயின்று வரும் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை மற்றும் 11-ம் வகுப்பிற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசிநாள்: 30.09.2020.     10 மற்றும் 12-ம் வகுப்பிற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசிநாள்: 30.10.2020. பட்டப் படிப்பிற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசிநாள்: 30.11.2020. மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நலன் தூத்துக்குடி, அவர்களை நேரில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads





Anbu Communications


Black Forest Cakes



Thoothukudi Business Directory