» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் : ஆட்சியர் அறிவிப்பு

வெள்ளி 25, செப்டம்பர் 2020 5:36:10 PM (IST)

வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளை நாளை (26ஆம் தேதி) மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரத்தில் 26.09.2020 அன்று வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்தில் 17-வது நினைவு தினமாக அனுஷ்டிக்கவும், வழிபாடு நடத்துதற்காகவும், மாநிலம் முழுவதிலிருந்தும் பேரவை உறுப்பினர்கள் கலந்து கொள்வதாலும் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளை 26.09.2020 அன்று மூடுவதற்கு ஆவண செய்யும்படி பார்வையில் காணும் கடிதத்தின்படி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டுள்ளார்.

எனவே தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின்படி, அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை சார்பாக மறைந்த வெங்கடேச பண்ணையாரின் 17-வது நினைவு தினம் அனுசரிப்பதை முன்னிட்டும், சட்டம், ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டும் 26.09.2020 அன்று தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, சாத்தான்குளம், ஏரல், திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய வட்டங்களிலுள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கடையுடன் இணைந்த மதுபானக்கூடங்களை மூடுவதற்கு, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (மதுபானக் கடை மற்றும் பார்) விதிகள் 2003-ன் விதி 12(2)-ன் படி இதன் மூலம் ஆணையிடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆட்சியரின் உத்தரவுப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி நகரில் உள்ள 39 மதுபானக் கடைகள் உட்பட ஏரல், சாத்தான்குளம், திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளில் உள்ள மாெத்தம் 80 மதுபானக்கடைகள் நாளை மூடப்படுகிறது என மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சே.வடமலை முத்துபாண்டியன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

KamatchiSep 26, 2020 - 10:55:03 AM | Posted IP 173.2*****

👌

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes
Anbu Communications
Thoothukudi Business Directory